மும்பை அடல் பாலம்
அடல் சேது அல்லது மும்பை துறைமுக இணைப்புப் பாலம் இதனை அதிகாரப்பூர்வமாக அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது என அழைப்பர். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இந்த கடல் பாலத்திற்கு அடல் சேது எனப்பெயரிடப்பட்டுள்ளது. 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கடல் பாலம் மும்பை மற்றும் நவி மும்பையை 20 நிமிடங்களில் இணைக்கிறது. அடல் பாலம் ஆறு வரிசைகளில் வண்டி செல்ல முடியும். ஒவ்வொரு திசைக்கும் 3 வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மீது நிறுவப்பட்ட கடல் பாலமான அடல் சேது விரைவுப் பாலத்தை 24 ஏப்ரல்2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.இது உலகின் 12வது நீளமான கடல் பாலம் ஆகும்.
Read article